Spread the love

மாநாடு 25 March 2022

பி.டி.ஆர்பழனிவேல்தியாகராஜனுக்குஎதிராக மாவட்டச் செயலாளர் சீனியர்கள் உட்பட பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனராம்.

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 80 இடங்களிலும் அதிமுக 15 இடங்களிலும் ,பாஜக 1 இடத்திலும், மற்றவை 4 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து திமுக சேர்ந்த இந்திராணி மேயராகவும், சிபிஎம் நாகராஜன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்தகட்டமாக மண்டலத் தலைவர்கள், குழுத் தலைவர்கள் பதவிக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இவற்றை திமுக கூட்டணியே ஒட்டுமொத்தமாக கைப்பற்றும் நிலையில் இருக்கிறது.

இந்த சூழலில் யாருடைய செல்வாக்கு எடுபடப் போகிறது என்ற போட்டி மதுரை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே மேயர், துணை மேயர் தேர்வில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனே அனைத்து முடிவுகளையும் எடுத்தார்.

இதனால் மாவட்ட செயலாளர் பொன்.முத்துராமலிங்கம் , இளைஞர் அணி ஜெயராமன், அவனியாபுரம் போஸ் முத்தையா, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தனர்.

தற்போதைய சூழலில் இந்திராணியை மேயராக திமுக சீனியர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மாவட்ட செயலாளர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடையில் பனிப்போர் தீவிரம் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு திமுக நிர்வாகிகளும் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றார்களாம்.

இந்நிலையில் அதிருப்தியாளர்களை சரிகட்டும் வகையில் மண்டலத் தலைவர் பதவி கொடுக்கலாம் என்று திமுக தலைமை ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.அந்த வகையில் மதுரை வடக்கு மண்டலத் தலைவர் பதவி முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மருமகள் விஜயமவுசிமி-க்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்காக ஸ்டாலின் வரை தூது அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை தெற்கு மண்டலத்தை பொறுத்தவரை மாவட்ட இளைஞர் அணியின் முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி மருமகன் முகேஷ் சர்மா, மகள் விஜயலட்சுமி ஆகியோர் ரேஸில் இருக்கின்றனர். இதில் விஜயலட்சுமி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூலம் சீட் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

இதனால் ஒரே குடும்பத்தில் பலமான போட்டி நிலவுகிறது. மதுரை மேற்கு மண்டலத்தில் போஸ் முத்தையா, இந்திரா காந்தி, உசிலை சிவா உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். மதுரை கிழக்கு மண்டலத்தில் ரோகினி, வாசுகி ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கின்றனர். மதுரை மத்திய மண்டலத்தில் பாமா, பாண்டிச்செல்வி ஆகியோரில் ஒருவருக்கு அதிக வாய்ப்புள்ளதாம்.

ஒட்டுமொத்தமாக மண்டலத் தலைவர் பெறுவதில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜனின் தயவும் தேவை என்று திமுக உ.பி.,க்கள் பேசிக்கள்கின்றனர் .இவ்வளவு பேர் மண்டலத் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தாலும், மறுபுறம் பேரம் பேசும் நிகழ்வுகளும் அரங்கேறி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

26890cookie-checkதிமுகவில் பனிப்போர் தொடங்கியது காரணம் பணமா பதவியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!