Spread the love

மாநாடு 29 March 2022

சென்னையில் இன்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக என் மீது திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். நான் இன்னும் 6 மணி நேரம் தமிழக பாஜக அலுவலகத்தில் இருப்பேன். திராணி இருந்தால், உண்மையாகவே ஆதாரம் இருந்தால், என்னை கைது செய்யுங்கள். நான் தனி ஆளுதான். தொட்டம்பட்டியில் இருந்து வந்த என்னை தொட்டு பார்க்கட்டும். இல்லையென்றால் நம் மீது தொடுக்கப்படும் பொய்களுள் இதுவும் ஒரு பொய்யாக கருதப்படும்.

திமுக போல கோழைத்தனமாக கண்டன நோட்டீஸ் கொடுப்பதல்லாம் எங்களுக்கு வராது. திமுக எம்.பி., வில்சன் என் மீது ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி, ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடி, வில்சன் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.610 கோடி. என்னிடம் ஊரில் ஆடுகள், மாடுகள் உள்ளது இதை வேண்டுமானால் பிடித்துக் கொண்டு போங்கள்.

ஒரு சாதாரண மனிதனை மதித்து 610 கோடி ரூபாய் கேட்கின்றனர். அதற்கு நான் வொர்த் இல்லை. ஆயிரம் நோட்டீசை சந்திக்க தயார். மிரட்டுங்கள் பார்க்கலாம்.மிரட்டலில் யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம். நான் முதல்வர் ஆவதற்கு பாஜகவில் இணையவில்லை.

அதற்கான தகுதியும் எனக்கு இல்லை. ஆனால், பாஜகவை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவேன். அதை செய்த பின், என் கடைசி காலத்தில் சொந்த கிராமத்தில் ஆடு, மாடு மேய்க்க சென்று விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

27710cookie-check6 மணி நேரம் இங்கு தான் இருப்பேன் முடிந்தால் தொட்டுப் பாருங்கள் கெத்து காட்டிய அண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!