Spread the love

மாநாடு 6 April 2022

திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் உலக முதலீட்டாளார் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து விதி எண் 110ன்-கீழ் முதலமைச்சர் அறிக்கை வாசித்தார்.

தமிழக மக்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. துபாய் பயணத்தில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும், கடந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் 68.375 கோடி ரூபாயில் 2.05 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் போடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க புதிய பணி குழு விரைவில் அமைக்கப்படும், என்று தெரிவித்தார்.

துபாய் பயணத்தில் 12,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டி.பி வேர்ல்டு, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. துபாயில் எரிசக்தி, சரக்கு போக்குவரத்து திட்டங்கள், மின்னணுவியல் திட்டங்களில் அதிக அளவிலான முதலீட்டை ஈர்க்க உரையாடினேன்.விரைவில் இந்த முதலீடு தொடர்பாக பணிக்குழு அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என கூறினார்.

இதைப்பற்றி அரசியல் நோக்கர்கள்  சொல்லும் போது இவர்கள் சொல்வதை நாம் எப்படி நம்புவது. இப்போது இவர்கள் சாதனை சாதனை என்று தம்பட்டம் அடிப்பார்கள் பிறகு அந்தத் திட்டத்தால் மக்களுக்கு அழிவு வருகிறது என்று அனைவரும் விழித்தெழுந்து பேச ஆரம்பித்துவிட்டாள் இந்த ஒப்பந்தங்களுக்கு கூட தெரியாமல் கையெழுத்துப் போட்டு விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்பார்.ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு டி.ஆர்.பாலு திமுக அமைச்சராக இருந்தபோது இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்திட்டத்திற்கு கையெழுத்திட்டிருந்தார். அந்தத் திட்டத்தின் கேடுகளை எதிர்த்து ஊர் ஊராகச் சென்று ஐயா.நம்மாழ்வார் போன்றவர்களும், பல அரசியல் கட்சிகளும் ,சமூக இயக்கங்களும், இளைஞர்களும் போராட்டத்தில் இறங்கிய உடன் நாங்கள் அதற்கு கையெழுத்து போடவில்லை என்றும் தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டோம் என்றும் பேசியதும் இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் என்றார்.

எது எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்.

29131cookie-check10 மாதங்களில்130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஸ்டாலினின் சாதனையா அரசியல் நோக்கர்களின் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!