Spread the love

மாநாடு 17 April 2022

பிரபல விளையாட்டு வீரர்கள் உட்பட ஆன்லைன் ரம்மி விளையாட்டு போன்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடும்படி தோன்றி விளம்பரப்படுத்தி இளைஞர்களை பாழ் படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் விளையாட்டால் தன் மகனை இழந்த நிகழ்வு நடந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் செட்டியப்பன். இவரது மகன் வினித். இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் இயங்காததால் இவருக்கு ஆன்லைனில் பணம் கட்டி சூதாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது தாயிடம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். சூதாட்டத்தில் பணத்தையும் இழந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல ஆன்லைனில் சூதாட்டம் ஆடுவதற்கு தாயிடம் பணம் கேட்டுள்ளார் அவரது தாய் பணம் தர மறுத்ததால் வீட்டிலிருந்து நேற்று மதியம் வினித் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில், ஏரியூர் அருகே ஆசாரி திட்டு என்ற வனப்பகுதியில் வினித் மரத்தில் சேலையில் தூக்கிட்ட நிலையில் இருந்ததை அப்பகுதியே சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஏரியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் வினித்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கல்லூரி மாணவன் தற்கொலை மரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் எனவும், இதனால் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குடும்பங்கள் பாதிக்கபடுகிறது எனவும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

31060cookie-checkஆன்லைன் விளையாட்டு குடும்பத்தையே தவிக்கவிட்டது

Leave a Reply

error: Content is protected !!