மாநாடு 19 June 2022
பல ஆண்டுகளுக்கு பிறகு திமுக தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக சுற்றுபயணம் மேற்கொண்ட போது திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழர்கள் அனைவரும் வாக்களித்து திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்று பேசி பரப்புரையின் போது வாக்கு சேகரித்தார்.
அதன்படி திமுக அதிக இடங்களில் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றது, திமுக ஆட்சி அமைத்தவுடன் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் இதற்கு காரணம் திராவிடம், இனி நடக்கவிருப்பது திராவிட மாடல் ஆட்சி இன்று பெரும்பாலான கூட்டங்களில் வலியுறுத்தி பேசி வந்தார் .
அதனையடுத்து திமுக கூட்டங்களில் பங்கேற்று பேசும்போது திராவிட மாடலை ,திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் என்று தன் கட்சியின் முக்கிய தலைவர்களிடமும், பிரமுகர்களிடமும், தொண்டர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
அதற்கிணங்க சமீபத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களும், திராவிட மாடல் கருத்தரங்குகளும், அனைத்து ஊர்களிலும் நடத்துவதற்காக திட்டமிட்டு அதற்கான பொறுப்பாளர்களையும் திமுக நியமித்தது, அதன்படி திராவிட மாடல் கருத்தரங்குகளும் ,பயிற்சி வகுப்புகளும் அனைத்து ஊர்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை தண்டையார்பேட்டையில் திராவிட மாடல் கருத்தரங்கு நடைபெற்றது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக ஆ.ராசா பங்கேற்றார். இந்த திராவிட மாடல் கூட்டத்தில் திமுகவின் பொறுப்பாளர்கள் தங்களது அடையாள அட்டையோடு கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்களுக்கு பரோட்டா உள்ளிட்ட உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
திராவிட மாடலை உள்வாங்கி அனைவருக்கும் புரியும்படி பரப்ப வந்த திமுக தொண்டர்களுக்கு நின்று கொண்டு தானே வாங்கி சாப்பிடும் பஃபே முறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் போதுமான உணவு, குறித்த நேரத்தில் ஏற்பாடு செய்யவில்லையாம், அதனால் கோபமடைந்த திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது , இதனால் பரோட்டா குருமா அவர்களது சட்டையெல்லாம் சிந்தி, சிதறி இருக்கிறது. சமையல்காரரிடமும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
உணவு கிடைக்காத கோபத்தில் உணர்வுகளை உள்வாங்கி வெளிப்படுத்த வந்த திராவிட மாடல் திமுகவினர் தங்களது அடையாள அட்டையை அறுத்து எறிந்துவிட்டு சென்றிருக்கின்றார்கள். இந்நிகழ்வு திமுகவின் முக்கிய தலைவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
இதைத்தான் தமிழர்கள் பசி வந்தால் பத்தும் பறக்கும் என்று சொல்லி வைத்தார்கள் .