மாநாடு 7 July 2022
வருகிற 11-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடைபெற இருக்கும் அதிமுகவின் பொது குழுவிற்கு தடை விதிக்க ஓபிஎஸ் தரப்பு பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது. ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒன்று இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல வழக்குகளின் முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
மேலும் சற்றுமுன் உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு, துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய நீதிபதிகளின் விசாரணைக்கு வந்தது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், அவதூறு வழக்கும், தள்ளுபடி செய்யப்பட்டது. இது எடப்பாடி தரப்பினருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.