மாநாடு 7 July 2022
தங்களது விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறி அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் .
ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனரான பி.ஏ.ஜோசப், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையிலான உட்கட்சி மோதல் முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அத்துடன், மனுதாரர் விளம்பர நோக்கில் வழக்கு தொடுத்ததாகக் கூறி அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.