Spread the love

மாநாடு 23 July 2022

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டண உயர்வு, சொத்துவரி, எரிகாற்று உருளை விலை உயர்வு இவற்றை கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த சீமான் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் ஆளும் கட்சிகளுக்கு சரமாரியாக கீழ்காணும் கேள்விக்கணைகளை தொடுத்தார்.

மின் கட்டண விலை உயர்வுக்கு மத்திய அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது அது கொடுக்கும் அழுத்தத்தால் தான் மின் கட்டண உயர்வு ஏற்படுகிறது என்கிறார் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அப்படி என்றால் மத்திய அரசு சொல்லுக்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்,

நீங்கள் உங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்துங்கள் வரிகள் கட்டி வாக்களித்த எங்களுக்கு கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது ஆகையால் ஏற்றுகிறோம் என்கிற நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைத்து வைத்திருக்கிறீர்களே அந்த நிறுவனங்களுக்கு நீங்கள் ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று வாக்களித்த மக்களுக்கு கூறுங்கள், மிகவும் குறைந்த காசுக்கு கொடுக்கிறீர்கள் தானே.

மின்சாரத்துறை கடன் அதிகமாக இருக்கிறது என்கிறார் அமைச்சர் அவரே இந்த கடன் எதனால் எதற்காக வாங்கி, உயர்ந்தது என்பதை வெள்ளை அறிக்கை தர வேண்டும் தந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் சீமான் .

மேலும் ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினிடம் கேளுங்கள் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுவாரா அல்லது அவருக்கு பெயர் வைத்த நாளை கொண்டாடுவாரா

என்று அதேபோலத்தான் இவர்கள் தமிழ்நாடு நாள் பிறந்தது நவம்பர் 1ஆம் தேதி ஆனால் இவர்கள் ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்கிறார்கள் கேட்டால் அன்று தான் பெயர் வைக்கப்பட்டது என்கிறார்கள். அதற்கு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை அவர்களே பதில் கூறி இருக்கிறார் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று நாம் பெயர் வைக்கவில்லை தமிழ்நாடு என்று இருந்த பெயரை சிலர் வஞ்சகத்தோடு மாற்றி இருக்கிறார்கள் அதை இப்போது மீட்டெடுத்ததன் காரணமாக தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று முன்னாள் முதலமைச்சர் திமுகவின் தலைவர் அண்ணாதுரை அவர்களே கூறியிருக்கிறார் இதையெல்லாம் இவர்கள் தெரிந்தும் தெரியாதது போல இப்போது நடந்து கொள்கிறார்கள்.

திமுக ராஜேந்திர சோழன் விழாவை அரசு விழாவாக எடுப்போம் என்பதும் பாஜக முருகனை முன் நிறுத்துவதும் எங்களைப் பார்த்து தான் இவர்களே செய்வதாக இருந்தால் எப்போதோ செய்திருப்பார்கள்.

நாங்கள் சமீபத்தில் ஆரம்பித்த கட்சி இருந்தாலும் இந்திய கட்சியும், மாநில கட்சியும் எங்களைப் பார்த்து இப்போதுதான் தமிழ் நிலத்தில் இவற்றையெல்லாம் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சீமான் 39 கோடி ரூபாயில் கருணாநிதிக்கு சமாதி மக்களின் வரிப்பணத்தில் கட்டுகிறார்கள் இப்போது நாடு இருக்கும் நிதி நெருக்கடியில் இதை செய்கிறார்கள் இது பத்தாது என்று பேனாவையும் வைக்கிறார்கள். ஒருவேளை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் தலைக்கு விக்  பயன்படுத்தினார் என்பதற்காக இவர் தன் தந்தை ஸ்டாலினுக்கு விக் வைப்பாரா இது என்ன தேவையற்ற செயலாக இருக்கிறது.

தன் அப்பாவுக்கு பெருமை பட எதுவும் செய்ய வேண்டும் என்றாலும், பெரிய மாளிகை கட்ட வேண்டும் என்றாலும் தன் சொந்த பணத்தில் கட்ட வேண்டும் பொதுமக்கள் கொடுக்கின்ற வரிப்பணத்தில் கட்டுவது ஏற்புடையதல்ல என்றார்.

மத்திய அரசு எல்லாவற்றிலும் விலை ஏற்றி வைத்திருக்கிறது இது பட்டியலிட்டால் பெரும் பட்டியலாக இருக்கும் எரிபொருள் , எரிக்காற்று உருளை, ஆரம்பித்து அனைத்து பொருட்களுக்கும் உதாரணமாக அரிசிக்கு மேற்கொண்டு வரி உயர்வு செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது, சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 200 பொருட்களுக்கு மேலாக வரிகளை பட்டியலிட்டு குறைத்துக் கொண்டிருந்தார் அப்படி என்றால் எத்தனை பொருட்களுக்கு எவ்வளவு வரியை உயர்த்தி இருப்பார்கள் என்று சாமானிய மக்கள் புரிந்து தெரிந்து தெளிவு பெற வேண்டும். மத்திய அரசு வெறும் மதத்தை வைத்துக்கொண்டு தனது ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மதத்திற்கும் ஆட்சிக்கும் வெகு தொலைவு இருக்க வேண்டும் மனிதத்தை வைத்து தான் ஆட்சி செய்ய வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும். வெறும் மதத்தை வைத்து மட்டும் ஆட்சி செய்த அருகில் இருக்கின்ற இலங்கையை பார்த்தாவது இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மத்திய, மாநில அரசுகளின் அநியாய விலை ஏற்றம் மக்களை பெரிதும் பாதிக்கிறது இதனை கண்டித்து இன்று நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம் இதனால் அரசுகள் நடவடிக்கை எடுத்து விலைகளை குறைப்பார்களா என்றால் எங்களுக்கு தெரியாது நியாயமான, மனசாட்சியுள்ள மக்கள் மீது அக்கறையுள்ள அரசாக இருந்தால் உறுதியாக குறைப்பார்கள் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதன் பிறகு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

விலையேற்றம் மக்கள் கருத்து  லிங்க்:https://youtu.be/Bjk11PF1tao

44760cookie-checkபேனாவோ விக்கோ தந்தைக்கு சொந்த பணத்தில் வைக்கணும் சீறிய சீமான்
One thought on “பேனாவோ விக்கோ தந்தைக்கு சொந்த பணத்தில் வைக்கணும் சீறிய சீமான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!