மாநாடு 26 July 2022
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று மாலை ஆர்ப்பாட்டம் செய்வதற்காக அனுமதி கேட்டு இருந்தனர் ,காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி நீதி கேட்டு இன்று மாலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் ரயிலடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்தப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டது : கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணத்தை மூடி மறைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும், மாணவியின் மரணத்தை அலட்சியப்படுத்திய தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம், உண்மை குற்றவாளிகளை பாதுகாத்து ,கைது செய்ய தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை மீது கிரிமினல் வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் மார்பகத்தில் காயம், கீரல் ,விலாஎழும்பு நொறுங்கி இருப்பது உள்ளிட்டு மாடியில் ரத்த கறையும் உள்ளது , இது தற்கொலை அல்ல,திட்டமிட்ட கொலை, தமிழக அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும், ஆர் எஸ் எஸ், பாஜக ஆதரவு பெற்ற கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி தாளாளர் மீது நேர்மையான உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும், ஶ்ரீமதி மரணத்தில் சக்தி பள்ளி நிர்வாகம், பிஜேபி , ஆர்எஸ்எஸ், போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டுச் சதியை அம்பல படுத்த வேண்டும், நீதி கேட்டு போராடிய பொதுமக்களை கலவரக்காரர் என்ற பெயரில்
தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஒடுக்கக் கூடாது, கைது செய்த மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக இயக்கத்தினர் உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் அருள் தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மாவட்டசெயலாளர் தேவா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழகம் இணைச்செயலாளர் இராவணன், எழுத்தாளர் தஞ்சை சாம்பான், சமுக ஆர்வலர் விசிறிசாமியார் முருகன் உட்பட 12பேர் கைது செய்யப்பட்டனர்.