மாநாடு 25 August 2022
சமீப காலமாக வலைத்தளங்கள் மூலமும் செயலிகள் மூலமும் அதிகப்படியான மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது இதில் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பெரும்பான்மையினர் சிக்கி தங்களது பொருட்களை இழப்பதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றார்கள், இதனை தடுப்பதற்காக காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறது, இருந்த போதும் இந்த சிக்கல் நின்ற பாடில்லை அறிவியல் வளர்ச்சியில் அறிவார்ந்தவர்கள் வளர்வதை விட அயோக்கியத்தனம் செய்பவர்கள் அதிகமாக வளர்கிறார்கள் என்பதையே பல நிகழ்வுகள் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.
அதன்படி ஒரு ஆசிரியை தனது வங்கிக் கணக்கில் இருந்து 21 லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார் அதன் விவரம் பின்வருமாறு: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி நகரில் உள்ள ரெட்டப்பநாயுடு காலனியைச் சேர்ந்தவர் வரலட்சுமி இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை இவருக்கு வாட்ஸ்அப்பில் லிங்க் ஒன்று வந்திருக்கிறது. ஆசிரியைஅந்த லிங்கை கிளிக் செய்திருக்கிறார் சில நிமிடங்களுக்கு பின் அவரது வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுவதாக குறுஞ்செய்தி வரத் துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர் உள்ளூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவலர்கள் வரலட்சுமி கணக்கு வைத்திருந்த வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்து இருக்கிறார்கள். அதில் வங்கியின் தரப்பிலிருந்து 21 லட்சம் ரூபாய் பணம் ஆசிரியையின் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான ஒப்புதலை ஆசிரியை தான் கொடுத்திருக்கிறார் என்று வங்கி தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து சைபர் கிரைம் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள், மோசடி கும்பல் யார் எப்படி இவரது அலைபேசிக்கு செயலியை அனுப்பி கிளிக் செய்தவுடன் பணம் எடுக்கப்பட்டது, என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது காவல்துறை, இருந்த போதும் மேலும் இது போன்ற மோசடி கும்பலில் இருந்து பொதுமக்கள் தப்பித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது மேலும் தெரியாத நபர்களிடமிருந்து ஏதாவது லிங்க் வந்து அதை கிளிக் செய்யுமாறு கூறப்பட்டிருந்தாலோ அல்லது அரசு தரப்பில் இருந்து அனுப்பப்பட்டது போல லிங்க் வந்து இருந்தாலும் அந்த லிங்கை தொட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.