Spread the love

மாநாடு 26 August 2022

இந்த மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் உள்ள வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தார் அப்போது இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள பொது சொத்துக்களும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பலரின் மண்டைகள் உடைக்கப்பட்டது தலைமை அலுவலக கூட்டு உடைக்கப்பட்டு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தார்கள் அங்கிருந்த ஆவணங்கள் முக்கிய கோப்புகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டதாக இபிஎஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது,

இச்சம்பவம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது அப்புகாரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் தரப்பு ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதில் அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணையை சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அதிமுக அலுவலக வன்முறை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது அதில் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம், இரண்டாவது குற்றவாளியாக வைத்திலிங்கம், மூன்றாவது குற்றவாளியாக மனோஜ்பாண்டியன் மற்றும் பலர் மீது காவலர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதாவது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 147, 148, 454, 380, 409, 427, 506(2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதாவது ஐபிசி 147 கலவரத்துக்கான தண்டனை, ஐபிசி 148 என்பது கலவரத்துக்காக ஆயுதம் ஏந்துவது, ஐபிசி 454 என்பது நம்பிக்கையை சீர்குலைத்து அத்துமீறி கட்டடத்தை உடைத்தல், ஐபிசி 380 என்பது திருட்டு .ஐபிசி 409 என்பது மற்றவரின் சொத்துகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்தல், ஐபிசி 427 என்பது தனியார் சொத்துக்களுக்கு இழப்பை ஏற்படுத்தல், ஐபிசி 506(2) என்பது கொலை முயற்சியோடு கூடிய மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்கள் மத்தியில் மிகவும் விரக்தி ஏற்பட்டிருக்கிறது, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய இந்த நேரத்தில் நீயா நானா போட்டி கட்சியின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்குமே தவிர எந்தவித முன்னேற்றத்தையும் கட்சியின் வளர்ச்சியையும் ஏற்படுத்தாது என்கிறார்கள் அடிப்படைத் தொண்டர்கள்.

48330cookie-checkஓபிஎஸ்,வைத்திலிங்கத்தின் மீதும் திருட்டு வழக்கு பதிவு விபரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!