மாநாடு 22 September 2022
தமிழக கோயில்களில் உள்ள விலைமதிப்பற்ற சிலைகள் பொருட்கள் திருடப்பட்டு இருக்கிறது அவற்றை மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இதன் மூலம் பல சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கோயிலில் இருந்த சம்ஹார மூர்த்தி சிலை திருடப்பட்டு இருக்கிறது, அதற்கு பதிலாக அதே இடத்தில் போலியான சம்கார மூர்த்தி சிலையை திருடிய கும்பல் வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஒரே கோயிலில் இருந்து கடத்தப்பட்ட 3 சிலைகள் அமெரிக்காவில் உள்ள கலை அருங்காட்சியகத்திலும், அமெரிக்காவில் உள்ள கலைப் பொருட்கள் ஏல கூடத்திலும் திருட்டு கும்பலால் விற்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு கோயிலில் இருந்து கடத்தப்பட்ட சம்ஹார மூர்த்தி சிலையின் மதிப்பு ரூபாய் 34 கோடி என்று தெரிய வருகிறது. செய்தியாளர்களை சந்தித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முதலாளி கூறியதாவது : இங்கிருந்து கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் தமிழ்நாட்டுக்கு மீட்டுக் கொண்டு வரும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறோம், கடந்த 1 ஆண்டில் மட்டும் 10 சிலைகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் . மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் மேலும் உள்ள சிலைகளையும் விரைவில் மீட்போம் என்றார். சிலையை கண்டுபிடிக்கும் அதே நேரத்தில் சிலையை கடத்தியவர்களையும், கடத்தலுக்கு துணை போனவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் அவர்களை வெளிஉலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.