மாநாடு 06 November 2022
விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சா.கோவிந்தசாமி இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென்று சமூக ஆர்வலர் திருவேங்கடம் கோரிக்கை வைத்திருக்கிறார் மேலும் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர் இந்த பகுதிக்கு செய்த திட்டங்களை தகவல்களாக தரும்படியும் கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி ஒருமையில் பேசி திருவேங்கடத்தை வெளியேற சொல்லி இருக்கிறார், ஊராட்சி மன்ற தலைவர் சமூக ஆர்வலரை திட்டி வெளியேற சொல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் திருவேங்கடத்தின் மீது பொய்யான புகாரை ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் இன்று 06.11.2022 தேதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 160 ன் கீழ் அழைப்பாணை அனுப்பியுள்ளதாகவும், அதன்படி காவல் நிலையத்திற்குச் சென்ற சமூக அலுவலர் திருவேங்கிடத்தை காலையிலிருந்து காவல் நிலையத்திலேயே வைத்திருப்பதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் வரவில்லை அதனால் தான் காக்க வைத்திருக்கிறோம் என்று காவலர்கள் காரணத்தை கூறுகின்றார்களாம், இதனால் சமூக ஆர்வலர் திருவேங்கடம் மிகுந்த மன உளச்சலில் இருப்பதாகவும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மற்றும் தகவல் சட்ட ஆர்வலர் கூட்டமைப்பின் வழக்கறிஞர் பிரகாஷ் தனது கடுமையான கண்டத்தை தெரிவிக்கிறார்.பொய் புகாரில் சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை எடுத்தால், மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்ய போவதாகவும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்பாட்டம் நடத்தபடும் என்றார்.
சமூக ஆர்வலர் திருவேங்கடம் மக்களுக்கு பல்வேறு நற்பணிகளை செய்திருக்கிறார் குறிப்பிட்ட சொல்ல வேண்டுமெனில் பரிக்கல்பட்டு கிராமத்தில் துணை பொது சுகாதார மையம் ,அங்கன் வாடி மைய கட்டிடம் ,டிரான்பார்மர் சிமெண்ட்சாலை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து முயற்சி எடுத்ததன் காரணமாக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதை பொறுத்து கொள்ள முடியாத
ஊராட்சி மன்ற தலைவர் இந்த பொய்புகாரை திருவேங்கடத்தின் மீது கொடுத்து மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது சமூக ஆர்வலர் திருவேங்கடம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக பல அமைப்புகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்தி காட்டி நீதியை நிலைநாட்டுவோம் என்றார் வழக்கறிஞர் பிரகாஷ்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மக்கள் நலனிற்காக செயலாற்றி வரும் சமூக ஆர்வலர் மீது தன் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பொய் புகார் கொடுத்து துன்பப்படுத்தப்பட்டு இருப்பின் தடுக்க வேண்டும். இனி அது நடக்காதவாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நடவடிக்கை எடுப்பாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.