மாநாடு 25 November 2022
தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற பாகப்பிரிவினை தொடர்பான வழக்கின் மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது,
தர்மபுரிமாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது குறுக்கு விசாரணையில் ஈடுபட்ட இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர் மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்து அவர்களின் தாயை அவமதிக்கும் விதமாக கேள்விகளை எழுப்பியுள்ளதை சுட்டிக் காட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி அந்நிகழ்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.
குறுக்கு விசாரணை செய்வது மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, காயப்படுத்துவதற்காகவோ இல்லை என்றவர் தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.