மாநாடு 25 November 2022
தஞ்சாவூர் மாநகராட்சி 1வது வார்டு முதல் 51 வது வார்டு வரை உள்ள பகுதிகளுக்கு 3 நாள் குடிநீர் விநியோகம் இருக்காது எனவே குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையர் சரவணகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் குழாய் பழுது அடைந்து இருப்பதால் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணி இந்த மாதம் 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாகவும் அதன் காரணமாக
தஞ்சாவூர் மாநகராட்சியின் 1வது வார்டு முதல் 51வது வார்டு வரை குடிநீர் விநியோகம் மூன்று நாட்கள் இருக்காது என்று அறிவித்திருக்கிறார். அதன்படி இந்த மாதம் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, 30ஆம் தேதி புதன்கிழமை, 1ஆம் தேதி வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் தஞ்சாவூரில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவித்திருக்கிறார்.