மாநாடு 26 November 2022
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மாடுகள் பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
ஏற்கனவே மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார், அதன்படி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் பராமரிப்பின்றி சுற்றி திரிந்து கொண்டிருந்த 15 மாடுகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர், மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்,
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சாலை சரியில்லாமல் விபத்து ஏற்படுவதும் . அபராதம் போடுவதோடு சேர்த்து மாநகராட்சி சாலைகளையும் போட்டால் விபத்தினை குறைக்கலாம. விபத்தினை குறைக்க எப்போது சாலைகள் போடுவார்கள் பார்ப்போம்.