29 மாநாடு November 2022
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகத்தை மூடுவதற்கு பல்வேறு வகையில் திமுக அரசு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது, ஏழை, எளியோர் பசியாறும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க வேண்டி இருக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையின் மூலம் கண்டனத்தை கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார் .
ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது.
அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள் என்று தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.