மாநாடு 13 December 2022
தஞ்சாவூரில் பழைய நீதிமன்ற சாலையில் இன்று மதியம் ஏறக்குறைய 1 மணியளவில் நான்கு குழந்தைகளோடு கணவன் மனைவி சாலை மறியலில் ஈடுபட்டார்கள், இதனால் சிறிது நேரத்தில் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது ஊடகவியலாளர்களும், காவலர்களும் அவர்களை சூழ்ந்தனர் அதன் விவரம் பின்வருமாறு.
தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை கிராமத்தில் மதியழகன், சந்திரா தம்பதியினர் நான்கு குழந்தைகளோடு வசித்து வருகின்றார்களாம், இவர்களில் ஒரு பெண் கல்லூரியில் படிக்கும் மாணவி இவர்களுக்கு குடியிருக்க சொந்த வீட்டுமனை இல்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்களாம்,
அதன்படி கடந்த 8-12-2022 அன்று இவர்களுக்கு தஞ்சாவூர் ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் அவர்களால் வழங்கப்படும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த பட்டா கொடுக்கப்பட்ட இடம் செங்கிபட்டியில் இருப்பதால் எங்களுக்கு இந்த இடம் வேண்டாம் நாங்கள் கேட்டது சூரக்கோட்டை கிராமத்திலேயே இருக்கின்ற அரசு இடம் , இதனை தராமல் செங்கிப்பட்டியில் எங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கி இருப்பது ஏற்புடையதல்ல என்று கூறி குடும்பத்துடன் போராட்டத்தில் இறங்கினார்கள்.
காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் போராட்டம் கைவிடப்பட்டது.இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி – மாநாடு செய்தி குழு
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.