உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது.
திமிரிக்கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாசலைத் திறந்து பாய்ந்து வருகிறது. அந்த ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் முயற்சியில் வீரத்தோடு திமில் பிடிக்கும் முயற்சியில் இளைஞர்கள் காணப்படுகின்றனர்.
இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் திடீரென்று புரூஸ்லி போல கெத்து காட்டி களத்தில் இறங்கிய வீரரை பார்த்து வர்ணனையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகமாகினார்கள்
இந்த வீரர் தனது சட்டையை கழட்டி விட்டு சுற்றிக் கொண்டு களத்தில் உள்ளார். அவர் களத்தில் கூட்டத்தோடு இல்லாமல் தனியாக நின்று கொண்டு காளைகாக எதிர்பார்த்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்த வர்ணனையாளர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய புரூஸ்லி என்று வர்ணனை செய்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு இப்போது மாலை 5-14 மணிக்கு நிறைவடைந்தது