Spread the love

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றில் தென்னாப்பிரிக்காவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்று சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை விளையாடின.


தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

அடுத்து ஜோஹன்ஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி முதல் நடந்தது.

இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்ன?
2021ல் இந்திய கிரிக்கெட் – இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை
முதலில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. 77.3 ஓவர்களை எதிர்கொண்டு 223 ரன்களைக் குவித்தது. இந்த இன்னிங்ஸில், இந்திய அணியின் விக்கெட் சரிவைத் தடுக்க, 201 பந்துகளுக்கு 79 ரன்களைக் குவித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பெரிதும் புகழப்பட்டார்.

ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும், டுவான் ஆலிவர், லுங்கி நிகிடி, கேஷவ் மஹராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.முதல் இன்னிங்ஸ் பேட் செய்ய வந்த தென்னாப்பிரிக்கா 76.3 ஓவர்களை எதிர்கொண்டு 210 ரன்களுக்கு தன் மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், மொஹம்மத் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 9 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 1.66 எகானமியொடு முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள், சீட்டுக் கட்டு போல சடசடவென சரிய விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே கொஞ்சம் நிதானம் காட்டினர்.

கோலி 143 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களையும், ரிஷப் பண்ட் 139 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்களையும் குவித்தனர். ரிஷப் பண்ட் கடைசி வரை தன் விக்கெட்டை இழக்கவில்லை.

தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என்கிற பெருமையையும் பெற்றார் ரிஷப் பண்ட். கே எல் ராகுல் 10 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இந்த மூவர் போக மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

ரிஷப் பண்ட்
இந்த முறை மார்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் நிகிடி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியின் கீகன் பீட்டர்சன் சிறப்பாக பேட்டிங் செய்து 82 ரன்கள் குவித்தார். தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் 30 ரன்கள் அடித்தார். 3 விக்கெட்டுக்கு பிறகு 4வது விக்கெட்டுக்கு வாண்டர் டசனும் டெம்பா பவுமாவும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி, வெற்றி இலக்கை எட்டினர்.

212 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்கா, போட்டி முடிய மேலும் ஒரு நாள் இருந்த நிலையில், தொடரை கைப்பற்றியிருக்கிறது

6060cookie-checkஇந்தியாவிடம் இருந்து தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

Leave a Reply

error: Content is protected !!