Spread the love

இன்று மதுரையில் உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி  நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது இதில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார் பிரபாகர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டு இருக்கிறது . இதில் இந்த ஆண்டு 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். இப்போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

சற்று முன் 5வது சுற்று முடிவு வரை 6 மாடு உரிமையாளர்கள், 3 பார்வையாளர்கள் மற்றும் 7 மாடுபிடி வீரர்கள், ஒரு போலீஸ் என மொத்தம் 17 பேர் காயமடைந்துள்ளார்கள் இந்நிலையில், 16 காளைகளை அடக்கிய பிரபாகர் முதலிடத்தில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு கார் பரிசளிக்கப்பட உள்ளது. சிறப்பாக களமாடும் காளைக்கு, கன்றுக்குட்டியுடன் நாட்டு பசுமாடும் பரிசளிக்கப்பட இருக்கிறது .

6320cookie-checkபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பிரபாகர் முதலிடத்தில் உள்ளார்

Leave a Reply

error: Content is protected !!