மாநாடு 01 February 2023
இன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அனைத்து விவசாயிகளும் குறைய 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஒருங்கிணைத்து தலைமை வகித்தார். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்படும், இந்த ஆண்டும் வழக்கம் போல மேட்டூர் அணை மூடப்பட்டது அதன் காரணமாக விவசாயத்திற்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது,
இந்நிலையில் கூடுதலாக இந்த ஆண்டு இன்னும் 15 நாட்களாவது தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிட்டால் மட்டுமே எல்லாமே செய்த பயிரை அறுவடை செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயிகள் இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து குறைந்தது 15 நாட்களாவது தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அதனை அடுத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.