Spread the love

மாநாடு 04 February 2023

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டு, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையின் மூலம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு இருக்கிறார்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு, தனியார் நிறுவனம் சார்பில் நடந்த இலவச வேட்டி- சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிரிழந்த 4 பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று ட்விட்டரில் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.

64660cookie-checkஇலவசத்தால் 4 பெண்கள் மரணம், வேல்முருகன் இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!