Spread the love

மாநாடு 11February 2023

தமிழ்நாட்டில் ஒரு கட்சியோடு கூட்டணி வைத்து விட்டாலே அந்த கட்சி எந்த மாதிரி அத்துமீறி அலங்கோலமாக ஆட்சி செய்தாலும் கூட்டணி தர்மம் என்கின்ற பெயரில் எல்லா கருமத்திற்கும் காவடி தூக்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு கட்சிகளை சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலில் பார்க்க முடிகிறது. 

இந்தச் சூழலில் தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கூட்டணியில் இருப்பதால் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று இன்று பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக கடந்த 199 நாட்கள் முடிந்து இன்று 200 வது நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டு திமுகவை தட்டி கேட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இங்கு விமான நிலையம் அமைத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்று கூறி 13 கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நல கூட்டமைப்பு, உள்ளிட்ட மக்கள் தொடர்ந்து இன்றோடு 200 நாட்களாக போராடி வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்களின் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக இன்று நேரில் வந்து கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசும்போது பல நாள் கோபத்தையும், ஒரே நாளில் போட்டு உடைக்கும் விதமாக பொங்கி எழுந்து போர் குரல் எழுப்பி இருக்கிறார்.

தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி வருவது ஏற்புடையதல்ல திமுக கூட்டணியில் எங்களது கட்சி அங்கம் வகிப்பதாலேயே எல்லாத்தையும் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு போக முடியாது, மத்திய அரசு நிர்பந்திக்கிறது என்கிற காரணத்தை கூறி தமிழக அரசு மத்திய அரசுக்கு துணை போகிறது என்றார் வேல்முருகன் போராடிவரும்13 கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக போராட்ட கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வேல்முருகன் திமுகவோடு கூட்டணியில் இருக்கிறார் இந்நிலையில் இவ்வாறாக வேல்முருகன் பேசுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவே தெரிய வருகிறது, அதிலும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் திமுகவின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் ,

இதற்கு முன் பலமுறை தனது கண்டனத்தை வேல்முருகன் தெரிவித்த போதும் திமுகவின் தலைமை கொஞ்சம் கூட செவிசாய்க்காமல் இருப்பதாலும், இது போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும் மத்திய அரசை காரணம் காட்டி தற்போதைய திமுக அரசு

மத்திய அரசுக்கு ஒத்திசைவு கொடுத்து வருவதால் தான் வேல்முருகன் இவ்வாறு பேசினார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிற இந்நேரத்தில் மக்களுக்காக வேல்முருகன் குரல் கொடுத்திருப்பதை அரசியல் நோக்கர்கள் பாராட்டி வருகிறார்கள், ஏனெனில் அவரே குறிப்பிட்டது போல கூட்டணியில் இருந்தால் அனைத்தையும் மறைத்து திரித்து ஆதரவாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்பதை மற்ற கூட்டணி கட்சியினருக்கும் மண்டையில் உரைக்கும் விதமாக வேல்முருகன் பேசியிருப்பது பலராலும் பாராட்டப்படுகிறது.

பரந்தூர் போராட்டத்தில் சிறந்து பேசிய வேல்முருகன் தொடர்ந்து போராடுவாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

65290cookie-checkபட்டைய கிளப்பிய வேல்முருகன், பதற்றத்தில் ஸ்டாலின் பக் பக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!