மாநாடு 12 February 2023
தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் பல ஆண்டுகளாக சிறப்புடன் இயங்கி வந்தது, இந்த சந்தையில் நுழைந்தால், சட்டி பானை முதல் சடங்கு, சம்பிரதாய பொருட்கள் வரை சைவ காய்கறிகள் முதல் அசைவ மீன், கறிகள் கறிவேப்பிலை வரை கிடைக்கும் என்பதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் இந்தப் பொருட்களை வாங்குவதற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வாங்கி பயன் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
இங்கு இயங்கி வந்த மீன் கடைகளை மாற்ற வேண்டும் ஏனெனில் இங்குள்ள மீன் கடைகளால் அசுத்தம் ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி இங்குள்ள மீன் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், வியாபாரிகள் மாறிச் செல்ல வேண்டும் என்று கூறி கீழவாசல் ராவுத்தா பாளையத்தில் நகராட்சிக்கு சொந்தமாக இருந்த இடத்தில் புதிதாக 2001 ஆம் ஆண்டு கடைகள் கட்டி முடிக்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு நாங்கள் மாறி செல்ல முடியாது என்று மீன் வியாபாரிகளும், மீன் மொத்த வியாபாரிகளும், மீன் வெட்டும் தொழிலாளர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். அதனை அடுத்து கட்டி முடிக்கப்பட்ட கடைகள் 7 ஆண்டுகளாக மூடியே கிடந்தது, அவ்வப்போது மாநகராட்சி சார்பில் மீன் வியாபாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று வாக்குறுதி தரப்பட்டதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு மீன் வியாபாரிகளும், மீன்வெட்டும் தொழிலாளர்களும், மீன் மொத்த வியாபாரிகளும் ராவுத்தா பாளையத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு மாறினார்கள் , அங்கு 56 சில்லறை மீன் விற்பனை கடைகளும், மீன் ஏலம் விடும் மொத்த வியாபாரிகளும், ஏராளமான மீன் வெட்டும் தொழிலாளர்களும் இடம் மாறினார்கள்,
இங்கு நல்ல முறையில் இயங்கி வந்த கடைகள் கொரோனா காலகட்டத்தில் கூட்டம் கூட கூடாது என்ற கட்டுப்பாடு இருந்ததால், இங்கிருந்த மீன் கடைகள் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதன்படி கொடிமரத்து மூளை அருகில் உள்ள தற்கால பேருந்து நிலையம் இயங்கி வந்த இடத்தில் சில மீன் கடைகளும், பட்டுக்கோட்டை பைபாஸ் பகுதியில் சில மீன் கடைகளும், கீழவாசல் பீட்டர்ஸ் பள்ளிக்கூடத்தில் சில மீன் கடைகளும், என பல்வேறு இடங்களிலும் மீன் கடைகள் கூட்டத்தை குறைப்பதற்காக அமைக்கப்பட்டது.
அதேபோல கீழவாசல் வெள்ளை பிள்ளையார் கோயில் அருகில் உள்ள ரவுண்டானா பகுதிகளில் தற்காலிக மீன் கடைகள் அமைக்கப்பட்டது, இங்கு எவ்வித கழிப்பறை வசதிகளோ , வெயில் மலைகளை தாங்கக்கூடிய அளவிற்கு மேற்கூரைகளோ கட்டிட வசதிகளோ ஏதுமற்ற நிலையில் அந்நேரத்தில் இயக்கப்பட்ட மீன் கடைகள் , இந்நேரம் வரை அப்படியே அங்கேயே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மீன் சந்தை இங்கு மாற்றப்பட்டபோது சாலைகளில் போக்குவரத்துக்கள் மக்கள் நடமாட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்து ஆனால் தற்போது அரியலூர், பெரம்பலூர், சென்னை, கும்பகோணம் உட்பட பல முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள்
இந்த சாலை வழியாகவே சென்று வருவதால் , போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக ஏற்படுகிறது, இந்த மீன் சந்தை பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. .இதனால் விபத்துக்கள் ஏற்பட்டும் இருக்கிறது, இனி விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதனை பலமுறை பல ஊடகங்களும் நமது
மாநாடு ஊடகமும் செய்திகள் வெளியிட்ட போதும் செவிகள் அற்றவர்களாகவே மாநகராட்சி அலுவலர்கள் நடந்து கொள்வதாகவே தெரிகிறது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீன் மார்க்கெட்டை பழைய இடத்தில் நல்ல முறையில் கட்டிடங்களை கட்டி மீன் வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டும், விபத்துக்கள் நடக்காமல் தடுக்க.வேண்டும்.
கொடுப்பார்களா அதிகாரிகள் ? தடுப்பார்களா விபத்துக்களை ? பொறுத்திருந்து பார்ப்போம்.
Your article helped me a lot, is there any more related content? Thanks!