Spread the love

மாநாடு 03 March 2023

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாழ வேண்டிய வாழைக்குருத்து தமிழ் மகன் ஈவேரா மறைந்ததை அடுத்து கடந்த 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற்றது, அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. அதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திமுகவின் முழு திறனையும் பயன்படுத்தி மக்களிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அவருக்கு திமுக கட்சியினரும் , கூட்டணி கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேலம் 7வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது சேலம் மாநகராட்சியின் துணை மேயரக இருக்கின்ற சாரதா தேவியும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்க வந்து அவ்வாறே வாழ்த்து தெரிவித்த போது சாரதா தேவியை பார்த்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ன சாரதா ரொம்ப கலராகிட்டே போற என்று பேசும் காணொளி செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது,

Thanks to news tamil   அதிலிருந்து தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசின பழைய பேச்சின் வரலாறும் வலம் வர தொடங்கி இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை இவர் விமர்சித்த வார்த்தையை கேட்க முடியவும் இல்லை , அச்சியில் ஏற்றவும் முடியவில்லை அவ்வளவு அநாகரிகமாக பேசி இருக்கிறார்.

தற்போது திமுகவினரால் கொண்டாடப்படும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இதற்கு முன்பு சீமான் பெரியாரின் பேரன் என்று சொல்கிறாரே என்று இவரிடம் நிரூபர்கள் கேள்வி எழுப்ப இவர் பெரியாரையும் இழிவுபடுத்தி பேசியிருக்கிறார் அதாவது எனது தாத்தா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி தான் என்று நா கூசும் வார்த்தைகளை வடித்தவரும்

இவர்தான், கருணாநிதியை கேவலப்படுத்த ஒரு வார்த்தை போதும் அதுதான் மு.க.ஸ்டாலின் என்றவரும் இவர்தான் என்கிறார்கள் இவரைப் பற்றி அறிந்தவர்கள்.

இந்த இளங்கோவன் தான் சேலம் மாநகர துணை மேயர் சாரதா தேவியை சபையில் அனைவரும் கூடியிருக்க, பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து இருக்க , என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி அழகை பற்றி அக்கறையோடு கண்டு பேசியதை கண்டவர்களுக்கு கடுப்பேத்தியிருக்கிறது.

சாதாரணமாகவே பெண்கள் பொது வெளியில் வந்து தங்களது பங்களிப்பை தந்தால்தான் அந்த சமூகம் தலைசிறந்து விளங்கும், “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்றார் பாரதி.

பாரதி கண்ட கனவு மெய்ப்பட வேண்டும் என்று உழைத்தவர்களில் பெரியாரும் ஒருவர் என்பார்கள். ஆனால் அவரின் பேரன் பெண்ணிடத்தில் பொதுவெளியில் இப்படி பேசியது பெண்ணியம் போற்றும் பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.

இதைப் பற்றி சிலர் கூறும் போது இளங்கோவன் மட்டும் இல்லைங்க சாரதா தேவி துணை மேயராக பதவி ஏற்றதிலிருந்து தொடர் பிரச்சினைகளை சந்தித்து வந்தாருங்க, திமுக மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களால் கூட பிரச்சனைகளை சந்தித்தார் சாரதா தேவி. துணை மேயருக்கான இருக்கை, மேயர் இருக்கையின் அருகில் இருக்க வேண்டும் அதைக் கூட முறையாக கொடுக்கவில்லை டம்மியாக தான் என்னை வைத்திருக்கிறார்கள் என்று சாரதா தேவி போராட்டத்தில் இறங்கினார்,

ஒரு கட்டத்தில் துணை மேயரை நீக்க மேயர் ராமச்சந்திரன் கையெழுத்து வாங்கியதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்,

இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்து சேலம் அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று உணர்ந்த பிறகு இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கின்ற கே.என்.நேரு தலையிட்டு இவரின் பதவி நீக்கத்தை தடுத்து நிறுத்தினார். என்றவர் தொடர்ந்து பேசினார்.

1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது அதனைத் தொடர்ந்து திமுகவும், அதிமுகவும் மாறி மாறி பொறுப்பில் இருந்தன. கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுக சேலத்தை கைப்பற்றியது, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 60 வார்டு அதில் 47 வார்டுகளை திமுக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கைப்பற்றியது மேலும் காங்கிரஸ் 2 இடங்களிலும், விசிக 1 இடத்திலும் வெற்றி பெற்றது,

சேலம் மாநகர மேயர் பதவிக்கு வருவதற்கு மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் ராமச்சந்திரன், 43 வது வார்டில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் குணசேகரன் , மத்திய மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அசோகன் உள்ளிட்ட 4 பேருக்கும் கடும் போட்டி இருந்தது.

துணை மேயர் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமையால் ஒதுக்கப்பட்டது, ராமச்சந்திரன் சேலம் மாநகர மேயராக அறிவிக்கப்பட்டார், துணை மேயருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 29 வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் கிரிஜா விற்கும், 7வது வார்டில் போட்டியிட்ட சாரதா தேவிக்கும் போட்டியிருந்தது, இறுதியாக சாரதா தேவி வென்று சேலம் மாநகர துணை மேயர் ஆனார். இவ்வாறு பல நெருக்கடிகளையும் சந்தித்து அரசியலில் பயணிக்கும் சேலம் துணை மேயர் சாரதா தேவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இப்படி பேசியதை அவர் எப்படி பார்க்கிறாரோ தெரியவில்லை அரசியலின் மீது அக்கறையுள்ள எங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது என்று கூறி முடித்தார்.

இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது ஈரோடு கிழக்கு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ? 

தன் மகன் இழந்ததையே மனதில் நிறுத்தாமல் மஜாவாக பேசும் இவர் , மக்களை மனதில் நிறுத்தி உழைப்பாரா என்ற கேள்வி எழுகிறது. 

66830cookie-checkமகனை மறந்து மஜாவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோபத்தில் மக்கள்
26 thoughts on “மகனை மறந்து மஜாவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோபத்தில் மக்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!