மாநாடு 12 ஏப்ரல் 2023
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் நல்லவர்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் கூட பரவாயில்லை அது அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை சார்ந்தது அதே நேரத்தில் தெய்வத்தை பார்த்ததில்லை உணர்ந்ததும் இல்லை அதன் மேல் நம்பிக்கை இல்லை என்றால் யாருக்கும் எவ்வித தீமையும் கூட இல்லை ஆனால் குழந்தையை குழந்தையாக பார்க்காமல் கொடூரமாக பார்த்து சிதைத்த இவனைப் போன்றோரை பல்வீர் சிங்கிடம் விசாரணைக்கு கொடுத்து கல்லால் அதை அடித்து சிதைக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு மனிதநேயம் உள்ள அத்தனை பேருக்கும் ஆத்திரம் பீறிட்டு வரும் எனக்கும்தான்.
நானும் இந்த செய்தியை படிக்கும் நீங்களும் யாராக இருந்தாலும் நம்மையெல்லாம் எழுத்துக்கூட்டி படிக்க கற்றுக் கொடுத்தவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்பதே எனது பார்வை அவ்வாறான கண்ணியமிக்கவர்களாக அவர்களும் நடந்து கொண்டு நம்மையும் வழிநடத்தும் ஆசிரிய பெருமக்கள் பலர் இருக்கையில் ஒரு சில ஒழுசைகளும் இருக்க தான் செய்கிறார்கள் என்பதற்கு கீழ்காணும் சம்பவமே ஆதாரமாக அமைந்திருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் சக்தி நகரில் அமைந்துள்ளது வைத்தியலிங்கா நர்சரி பிரைமரி பள்ளி. இந்தப் பள்ளியின் தாளாளர் 62 வயதுடைய பக்கிரி சாமி . திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த இவர் 30வது வார்டு கவுன்சிலர் என்பதும் ஏற்கனவே விழுப்புரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுப்பேட்டை தேசிங்கு ராஜா நகரில் வாழும் ஒரு தம்பதியினரின் 5வயது குழந்தை பக்கிரி சாமி தாளாளராக இருந்த பள்ளியில் யுகேஜி படித்துக்கொண்டிருந்திருக்கிறது . அந்த குழந்தை வழக்கம் போல ஏப்ரல் 11ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் வயிறு வலிப்பதாக சொல்லி அழுது கொண்டே இருந்திருக்கிறது.
அழுத குழந்தையை அழைத்துக்கொண்டு சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்கு மருத்துவர்களிடம் சென்றபோது குழந்தையை சோதித்த மருத்துவர்கள் சொன்ன வார்த்தை பெற்றோர்களை கதி கலங்க வைத்திருக்கிறது. அதாவது குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது .
அதனையடுத்து பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள் அவர்கள் நடத்திய விசாரணையில் குழந்தையிடம் கடலை மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் தனியார் பள்ளியின் தாளாளர் பக்கிரி சாமி ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
அதன் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பக்கிரி சாமியை கைது செய்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் அனைத்து விவரமும் அறிந்த தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்தைப் பற்றி சட்டமன்றத்தில் குறிப்பிடுகையில் இந்த அரசு குற்றச்செயலை யார் செய்தாலும் மன்னிக்காது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இவ்வாறான குற்றச் செயல்களை செய்பவர்கள் மனித குலத்திற்கே ஒரு அவமானச் சின்னமாக விளங்குகிறார்கள் என்று காட்டமாக பேசியவர் திமுகவின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக பக்கிரிசாமியை நீக்க உத்தரவிட்டதன் பேரில் பொதுச் செயலாளர் துரைமுருகன் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி இருக்கிறார்.
கட்சியில் இருப்பதற்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் இருப்பதற்கும் தகுதியற்றவர் இந்த கொடுஞ்செயலை செய்த பக்கிரி சாமி எனவே தமிழக அரசு இவருக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆசிரியர் சமூகத்துக்கே அவமானத்தை தேடிக் கொடுத்த பக்கிரி சாமிக்கு சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.