மாநாடு 11 July 2023
தஞ்சாவூரில் இன்னும் சில நாட்களில் புத்தகத் திருவிழா தொடங்க இருக்கும் நிலையில் புத்தகத் திருவிழாவை குத்தகைக்கு விடும் நபர்கள் இருக்கும் வரை மக்கள் வரிப்பணம் வீணாக தான் போகும் இது முதல்வர் கவனத்திற்கு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தடுக்கவில்லை என்றால் சரிப்பட்டு வராது என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் பனசைஅரங்கன் ஏன் என்னாச்சு என்று நாம் கேட்க நான் எனது பதிவாகவே உங்களுக்கு அனுப்புகிறேன் அதனை வெளியிட முடியுமா என்று கேட்டார் அனுப்புங்கள் தாராளமாக மாநாடு மின்னிதழிலும் வருகிற மாதம் வெளிவர இருக்கிற அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழிலும் வெளியிடுகிறேன் என்று கூற அவர் அனுப்பிய பதிவு கீழ்க்கண்டவாறு:
தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனதற்கு பின்னால் மாவட்ட தலைநகரங்கள் தோறும் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டு அதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் சென்னையில் நடைபெறுகிற புத்தகத் திருவிழாவுக்கும் பெரும் தொகையை ஒதுக்கி அவர்களுக்கு தருகிறார்.
இந்த நிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஏதோ அவர்கள் ஏற்பாடு செய்து நடத்துவதைப் போல அந்த சங்கத்தின் செயலாளர் முருகன் அவர்கள் தான்தோன்றித்தனமாக தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே மாவட்டங்களில் அரங்குகள் ஒதுக்கீடு செய்கிறார்.
இது மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுகிற புத்தகத் திருவிழா ஆகவே உள்ளூரில் எவர் எவர்கள் புத்தகக் கடைகள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் கேட்டால் புத்தக அரங்குகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டியது மாவட்ட ஆட்சித் தலைவரின் கடமை ஆகும்.
ஆனால் மாவட்ட நிர்வாகமோ எல்லாவற்றையும் திருவாளர் முருகன் அவர்களிடத்திலே ஒப்படைத்து விட்டு ஒரு குறிப்பிட்ட கடைகளை மட்டும் மாவட்ட நிர்வாகங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரங்குகள் அமைத்துக் கொள்கிறார்கள்
அதுவும் சில மாவட்டங்களில் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே புத்தகங்களை வாங்க வேண்டும் என்று சில முகவர்களை வைத்துக்கொண்டு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் நடந்து கொள்கிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரையில் மின்வாரிய துறையில் கடந்த 17 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் ஊதியம் பெற்றுக் கொள்கிற திருவாளர் முத்துக்குமார் சுற்றுலா துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜசேகரன் மற்றும் சில நபர்களின் துணையோடு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து முறைகேடில் நடந்து கொள்கிறார்கள்.
சங்க நிர்வாகிகள் இடத்திலே ஏதாவது கேள்வி கேட்டால் கேள்வி கேட்ட நபர்களுக்கு எந்த ஊரிலும் அரங்குகள் தர முடியாது என்று ஆணவப் போக்கோடு நடந்து கொள்கிறார்கள்.
இது மக்கள் வரிப்பணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில் ஒதுக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட ஒரு சங்கமே அனுபவிப்பது என்பது ஏற்புடையது அல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து புத்தக திருவிழாவை நடத்த வேண்டும் என்பது ஒரு மரபாக தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை நூலகத்துறை ஆகியவற்றுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உரிய அறிவுறுத்தலை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.நா.பனசைஅரங்கன் குறிப்பிட்டுள்ளார்.