*தேர்தல் தேதி அறிவிப்பு*
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வெளியாகப் போகும் அறிவிப்பு.
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது.
ஆனால், இதுவரை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறவில்லை. அதற்கான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே நான்கு மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனவரி 27 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் தர வேண்டிய கட்டாயம் உள்ளது. எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லாத நிலையில் மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
ஜனவரி மாதம் 19ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்புவிடுத்துள்ளது.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் வரும் 27-ஆம் தேதிக்குள் எந்த நாளிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஜனவரி 20ஆம் தேதி அறிவிப்பு வெளியிடலாம் என்றும் பிப்ரவரி 3வது வாரத்திற்குள் தேர்தலை நடத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது