மாநாடு 04 July 2024
இன்றும் நடந்த விபத்து உயிர் சேதம் இல்லை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் எங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து காரங்குடா இடைபட்ட தேசிய நெடுஞ்சாலையில் சிறு பாலம் உள்ளது அந்த பாலம் திடீரென பள்ளமாகிவிட்டது பள்ளம் விழுந்த இடத்தை சரி செய்யாமல், திடீர் வேகத்தடை 2 வைத்து அமைத்திருக்கிறார்கள் போடப்பட்டுள்ள புதிய வேத்தடைக்கு முன் எந்த ஒரு முன்னறிவிப்பு எச்சரிக்கை பலகையும் இல்லை
வேகத்தடை அருகே சென்றால் மட்டுமே தெரிகிறது, இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் கார் வாகனங்கள் 20மேற்பட்ட விபத்துக்கள் நடந்து கொண்டே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதனை உரிய ஆய்வு செய்து வேகத்தடை உள்ள 10 மீட்டர் தூரத்தில் முன்னறிவிப்பு பாதைகை வைத்து மேலும் விபத்து
நடக்காமல் இருக்க தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். முன் வருமா தேசிய நெடுஞ்சாலைத்துறை ? உடனடியாக உத்தரவிடுவாரா மாவட்ட ஆட்சியர்? பொறுத்திருந்து பார்ப்போம்.
awesome