மாநாடு 1 March 2025
தஞ்சாவூர் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், திருமதி கலைச்செல்வி தலைமை நடைபெற்றது, கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக, மாநில பொதுச் செயலாளர் திரு வி சுந்தரராஜன் அவர்கள், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், மாவட்ட செயலாளர், திரு செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார் கூட்டத்திற்கு, சங்க ஆலோசகர், திரு தரும கருணாநிதி, மாவட்ட துணைத் தலைவர்கள், திரு முருககுமார், யுவராஜ், பொருளாளர் திரு அய்யம்பெருமாள், துணைச் செயலாளர்கள், பரணிதரன், சேக் உமர்சா, ஆகியோர் ,முன்னில வகித்தனர், ரெகுலர் வட்டாட்சியர்களை,
பார்த்தவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில், இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாகவும் வழங்கப்பட்டு வருகிறது, இதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் ரெகுலர் வட்டாட்சியர்கள் பார்க்காதவர்களுக்கு, வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தமளிப்பதாகும்,
தஞ்சாவூர் மாவட்டத்தில், வட்டாட்சியர்கள் துணை வட்டாட்சியர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை, குறித்த காலத்தில் பயிற்சி அனுப்பப்படுவதில்லை, (காவல்துறை பயிற்சி, நீதித்துறை பயிற்சி, பவானிசாகர் பயிற்சி, நில அளவை பயிற்சி) பழைய ஓய்வூதியத் திட்டத்தை, உடன் அமல்படுத்திட வேண்டும், சரண் விடுப்பு ஒப்படை செய்வதை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மற்றும் பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது, முடிவில் திரு முரளி குமார் நன்றி கூறினார்.