Spread the love

மாநாடு 9 March 2025 

தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாகம் தாறுமாறாக இருப்பதை சாமானியர்கள் முதல் சம்பந்தப்பட்டவர்கள் வரை அறிய முடியும், அதிலும் பல கட்டிடங்களின் விதிமீறல்களும் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி அமைக்கப்படும் கடைகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக எவ்வளவோ ஆக்கிரமிப்புகள் இருப்பதை மாநாடு செய்தி குழுமும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னாலும் கூட சிலவற்றை மட்டும் நாம் சொன்னோம் என்பதற்காக சரி செய்கிறார்கள் ஆனால் பல குறைகள் அவர்களின் அக்கறையின்மையால் அப்படியே இருப்பதை நாம் கண்டு கண்காணித்து சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு வருகிறோம். தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் ஏ.ஜி. ரமேஷ் வழங்கிய இறப்புச் சான்றிதழில் எபின் சுரேஷ் என்கிற அதிகாரியின் கையெழுத்தை அசால்டாக முறைகேடாக போட்டுக் கொடுத்த செய்தியையும் நாம் வெளியிட்டு மாநகராட்சி ஆணையர் கண்ணனிடமும் மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் மாநகர் நல அலுவலர் டாக்டர்.நமச்சிவாயம் உள்ளிட்ட பலரிடமும் தெரிவித்து இருக்கிறோம்… இதுபோல பல பிரச்சனைகளையும் மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடுவது மாநகராட்சியை குற்றப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அல்ல மாநாடு செய்தியின் மூலமாக மாநகராட்சி சுத்தப்படுத்த வேண்டும் என்பதே நமது நோக்கம் அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் கட்டப்பட்டுள்ள முறையற்ற கட்டிடங்களின் தகவல்களையும் தஞ்சாவூர் மாநகராட்சி அதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையையும் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்ததற்கு இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சி தரப்பில் இருந்து தகவல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாநகராட்சியில் முறையாக கட்டப்பட்ட மாநகராட்சி வணிக வளாக கட்டிடங்கள் தரமாக கட்டப்படவில்லை என்ற போதிலும் இதுவரை சரியாக ஏலம் விடப்படாமல் சாத்தியே கிடப்பதும் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் நடைபாதைகளில் கூட மக்கள் நடமாட முடியாத விதத்தில் கடைகள் ஆக்கிரமித்து இருப்பதையும் இதன் காரணமாக மக்கள் சாலைகளை அடைத்து நடந்து செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுவதையும் நாங்கள் மட்டுமல்ல நீங்களும் நன்கு அறிவீர்கள் இப்படிதான் பல விதத்திலும் முறையற்ற நிர்வாகம் தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் விபி கார்டன் என்கிற இடத்தில் ஆலியா ஹோட்டல் கட்டுமானத்திற்காக தரை தளத்திற்கு 900 சதுர அடியும் மேலும் மேல் தளத்திற்கு 900 சதுர அடி கட்டுவதற்கு மட்டும் அனுமதி பெற்று விட்டு 13,500 சதுர அடி கட்டிடத்தை கட்டி உள்ளதாக சமூக ஆர்வலர் பொன்.தர்மபாலா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கில் 22-8-2024 வந்த தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட ஆலியா ஹோட்டலின் கட்டுமானத்தை அகற்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .


ஆனால் அதனை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ள தஞ்சாவூர் மாநகராட்சி அலட்சியமாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என்று நேரில் சென்று கேட்பதற்காக சமூக ஆர்வலர் பொன்.தர்ம பாலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முறையும் பிப்ரவரி மாதமும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணனை நேரில் சந்தித்து கேட்டதாகவும் அதற்கு தக்க பதில் கூறாமல் ஆணையர் இருந்ததாகவும் கூறப்படுகிறது இதற்குப் பிறகு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் நீங்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் அவமதிக்கிறீர்கள் என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுக்கப் போகிறேன் என்று சமூக ஆர்வலர் கூறியதாகவும் அதன் பிறகு 25-2-2025 அன்று ஆலியா ஹோட்டல் அனுமதி மீறி கட்டப்பட்டுள்ளதை அகற்றுவதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் இது நாள் வரை நோட்டீஸ் கொடுத்ததோடு கடமை தீர்ந்து விட்டது என்று காலம் தாழ்த்தி வருவதற்கான காரணம் ஏதாவது இல்லாமலா இருக்கும் என்கிறார்கள் வழக்கு தொடர்ந்தவர்கள். ஏதோ ஒரு வகையில் தெரியாமல் தவறு நடப்பது இயல்பு தான் என்றாலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் தவறு என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது என்பதற்கு இதுவும் கூட ஒரு அத்தாட்சியாக இருக்கிறது என்பதையே நமக்கு காட்டுகிறது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கே இந்த மதிப்பு என்றால் எந்த முறையில் மாநகராட்சி நிர்வாகத்தை சரி செய்ய முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்…

75810cookie-checkதஞ்சாவூரில் விதிமீறல் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு காலம் தாழ்த்தும் மாநகராட்சி காரணம் ?….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!