Spread the love

மாநாடு 5 April 2025

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்காமலும் சில அரசு பேருந்து எண்:A14,A11,A5,A39A,343 ஆகிய எண்கொண்ட அரசு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்காமல் இருந்து வருகிறாராம்

பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம். இதனை அறிந்த சமூக ஆர்வலர்களிடமும் பொது மக்களிடமும் இது சார்ந்து விசாரணை செய்தபோது தனியார் பேருந்து இயங்கிவரும் நேரங்களில் இயங்க கூடிய பேருந்தை மட்டுமே இயக்காமல் தனியார் பேருந்து நிறுவனத்திடம் ஒரு தொகையை மொத்தமாக வசூல் செய்துகிட்டு இருந்துவருகிறார் பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம் அதனால் தான் சில அரசு பேருந்தை சரியான நேரத்திற்கு இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளார் என்று கூறுகின்றனர், பேராவூரணி அரசு போக்குவரத்து துறை கிளையில் மொத்தமாகவே 25 அரசு பேருந்துகள் மட்டுமே இயக்க படுவதாகவும் அதனால் இரவு நேரங்களில் எந்த பகுதிகளுக்கும் செல்லமுடியாமல் வியாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், இவர் இயங்கி கொண்டு இருந்த பேருந்தையும் இயக்காமல் இருந்து வருகிறார் இது போன்று செயல்பட்டு மக்களிடம் அரசுக்கு அவபெயரை ஏற்படுத்தி தனியார் பஸ் நிறுவனத்திடம் வசூல் செய்வதை தடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு அரசு பேருந்தை அதிக படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது மேலும் பேராவூரணி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் மகாலிங்கம் மீது உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்,

தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மேலாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் போக்குவரத்து துறை அமைச்சர்? எதிர்பார்ப்புடன் மக்கள். 

செய்தி – அருள்.

78080cookie-checkதஞ்சை அரசு போக்குவரத்து துறை மேலாளர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்காக மக்களை கதற விடுகிறார் , நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
2 thoughts on “தஞ்சை அரசு போக்குவரத்து துறை மேலாளர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்காக மக்களை கதற விடுகிறார் , நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?”
  1. Does your site have a contact page? I’m having a tough time locating it but, I’d like to send you an e-mail. I’ve got some recommendations for your blog you might be interested in hearing. Either way, great blog and I look forward to seeing it improve over time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!