Spread the love

மாநாடு 13 April 2025

கடந்த 01.04.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அம்மாபேட்டை புத்தூர் கலைமகள் நகர் பகுதியில் வீட்டின் வாசலை சுத்தம் செய்த கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து தனது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை அறுத்துச் சென்றதாக வனஜா என்பவர்க அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையினை பாபநாசம் துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் அம்மாபேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையில் பாபநாச தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு CCTV கேமராக்களை கண்காணித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குற்றவாளி

திருவையாறு பாவா சாமி அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகாஷ் என்பது தெரியவந்திருக்கிறது, செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரகாஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக பாபநாச உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர், பாபநாச உட்கோட்ட சிறப்பு தனிப்படை பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

78590cookie-checkவீட்டு வாசலில் இருந்த பெண்ணின் தாலி செயினை அறுத்தவன் அதிரடி கைது
3 thoughts on “வீட்டு வாசலில் இருந்த பெண்ணின் தாலி செயினை அறுத்தவன் அதிரடி கைது”
  1. Hello my family member! I want to say that this article is amazing, nice written and include approximately all significant infos. I’d like to look more posts like this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!