மாநாடு 20 March 2022
திருச்சியில் இருந்து சனிக்கிழமை இரவு ஆஸ்பெட்டாஸ் சீட் Asbestos Sheet ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்றிருக்கிறது.
வெண்ணாற்று மேம்பலம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென பாலத்தில் இருந்து நிலைதடுமாறி வெண்ணாற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
லாரியில் காட்டூரை சேர்ந்த ஓட்டுநர் மொய்தீன்கான்(50), திருச்சி பெரியார் நகரை சேர்ந்த சக்திவேல்(21), நியாஷர் ரகமத்துல்லா(34), அசோக்(34), கருப்புசாமி(25) மற்றும் கார்த்திக்(35) ஆகிய ஐந்து பேர் இருந்துள்ளனர்.
விபத்து குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற பூதலூர் காவல்நிலைய காவலர்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 4 பேரை காயங்களுடன் மீட்டனர். பின்னர், 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், திருச்சியை சேர்ந்த கார்த்திக் கிடைக்காததால் அவரை தொடர்ந்து தேடும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் கார்த்திக் கண்டறியப்படவில்லை இதனிடையே, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்