Spread the love

மாநாடு 23 April 2022

பொதுவாகவே சாலையில் செல்லும் போது கொஞ்சம் கவனம் தவறினாலும் கூட வாகனத்தை இயக்குபவர்களுக்கும் எதிரே வருபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய விபத்தை ஏற்படுத்துவதை நாம் அன்றாடம் செய்திகளின் வாயிலாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது.

இப்படி ஒரு விபத்துதான் தஞ்சாவூர் கருந்தட்டங்குடி சாலையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. தஞ்சாவூர் நகரை இணைக்கும் இரண்டு ஆற்றுப்பாலங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது அதன் காரணமாக போக்குவரத்துக்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றது கரந்தை பாலத்தை பயன்படுத்த முடியாத மக்கள் பயன்படுத்த அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையான கரந்தட்டாங்குடி திராவிட கூட்டுறவு வங்கியை ஒட்டியுள்ள தெருவிலிருந்து மாட்டு வண்டியில் செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு சிறுவன் இரண்டு மாட்டு வண்டியை ஓட்டி வந்துள்ளார்.

அந்த தெருவிலிருந்து கும்பகோணம் முக்கிய சாலைக்கு செல்வதற்காக வண்டியை திருப்பியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு தெருவோரத்தில் டிவிஎஸ் 50 என்ற இருசக்கர வாகனத்தை ஒருவர் நிறுத்திவிட்டு அங்கிருந்த கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்நேரத்தில் மாட்டு வண்டி சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ்50 இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டி 10 அடி தூரம் இழுத்து சென்று சாலை நடுவே நின்றது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த இடத்தில் குழந்தைகளோ முதியவர்களோ ,நின்றிருந்தாள் அசம்பாவிதம் நடைபெற்றிருக்கும் என்பதை இந்த நிகழ்வைப் பார்த்த பொதுமக்கள் பேசிக்கொண்டார்கள். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூரில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் சிறுவர்கள் கட்டுப்பாடில்லாமல் வாகனங்களை இயக்குவதை அதிக அளவில் காண முடிகிறது. சம்மநதப்பட்ட அதிகாரிகள் சிறுவர்கள் எந்தவித வாகனங்களையும் இயக்குவதை தடுத்து பெரும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.

கோர விபத்து நடைபெறுவதற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

31932cookie-checkதஞ்சையில் வினோத விபத்து பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!