Spread the love

மாநாடு 28 November 2022

தஞ்சாவூர் மானோஜிபட்டி வனதுர்கா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் 25 வயதுடைய விஜய் கொத்தனார் வேலை செய்து வந்தார்,

இவர் தொம்பன் குடிசை அருகியுள்ள ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் காதில் ஹெட்போன் மாட்டி போன் பேசியபடி சென்று கொண்டிருந்தவர் தண்டவாளத்தை கடந்து மறுபக்கம் செல்ல முற்பட்டபோது ரயிலில் அடிப்பட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்.

இத்தகவல் அறிந்து வந்த ரயில்வே காவலர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள், காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு தண்டவாளத்தை கடக்க சென்றதால் இவ்விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

57720cookie-checkதஞ்சாவூரில் இளைஞர் விபத்தில் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!