மாநாடு 28 November 2022
மக்கள் வீட்டு மின் இணைப்போடு ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது, அப்படி இணைக்காதவர்களுக்கு மின் கட்டணம் கட்ட முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது, அதனால் பல மக்கள் சிக்கலுக்கு ஆளானதாக கூறப்பட்டது அதனால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது, இதனை முன்னிட்டு மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்காதவர்களும் மின் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் மின் இணைப்போடு ஆதாரை கட்டாயம் இணைக்க அவசியம் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டிருக்கிறது இந்த முகாம் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, நுகர்வோர்கள் மின் கட்டணம் கட்டும் அலுவலகங்களில் தங்களது மின் அட்டையையும் ஆதார் அட்டையையும் எடுத்து வந்து மின் இணைப்போடு ஆதார் எண்ணையும் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தெளிவான திட்டமில்லாததாலேயே இவ்வாறு மாற்றி மாற்றி அறிவிப்பு தந்து மக்களை குழப்புகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.