மாநாடு 17 October 2022
அனைத்திந்திய அண்ணா திமுக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51 வது ஆண்டு தொடங்குவதை தஞ்சாவூர் ரயிலடியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும் ,ஜெயலலிதா சிலைக்கும், ஓபிஎஸ் அணியினர் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் அறிவுறுத்தலின்படி தஞ்சை தெற்கு மாவட்டம், தஞ்சை சட்டமன்ற தொகுதி சார்பில், கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி தலைமையில் தஞ்சை ஆற்றுபாலத்திலிருந்து பேரணியாக சென்று மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்தப் பேரணியில் மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சன்முகபிரபு,கோட்டை பகுதி செயலாளர் முன்னாள் மாநகராட்சி கொறடா சாமிநாதன், கீழவாசல் பகுதிசெயலாளரும், கூட்டுறவு பண்டகசாலைதுணைத்தலைவருமான எஸ்.ரமேஷ் , தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் துரை .வீரனன் ,தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் சாமிவேல் ,தகவல் தொழிநுட்ப பிரிவு திருச்சி மண்டல செயலாளர் மாவட்ட கவுன்சிலர் வினுபாலன் தஞ்சை மாநகராட்சி 20 வது வார்டு கவுன்சிலர் சரவணன் ,ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ்,கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பாவா என்கிற ராமச்சந்திரன், மேலவெளி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்,புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் உட்பட பெருவாரியான தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.