Spread the love

மாநாடு 18 February 2022

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது .இதையொட்டி அதிமுக பாஜக இடையே நடந்த இடங்கள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போதுஅதிக இடங்களை பாஜக கேட்டது. அதிமுக இதை ஏற்காததால், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து பாஜக விலகியது.தமிழகம் முழுவதும் பாஜக  தனித்துப்போட்டியிடுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 8 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளது என அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டினார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு  பாஜக கூட்டணியை விட்டுச்சென்றது நன்மைதான் என்று பகிரங்கமாகப்பேசினார்.மேலும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தேவையற்ற கிரகங்கள் விலகியது.இனி நமக்கு நல்ல சகுனம் தான் என்று கூறினார்.

ஆனால் புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்துள்ளது.அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் கீரமங்கலம் பேரூராட்சி 10வது வார்டில் பாஜக சார்பில் சுமதி, 11வது வார்டில் பாஜக சார்பில் ராஜாமணி என்கிற வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே இவர்களை ஆதரித்து திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்துப்பேசினார்.

அவருடன் வேட்பாளர்கள் 2 பேரும் அருகில் இருந்தனர். விஜயபாஸ்கர் தரப்பில் இது குறித்து விசாரித்த போது, கீரமங்கலம் பேரூராட்சியில் மட்டும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது என்றனர். பாஜக தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடும் நிலையில், கீரமங்கலத்தில் மட்டும் கூட்டணி வைத்து பாஜக வேட்பாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆதரவு திரட்டியது அதிமுகவில் அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைப்பற்றி கேட்கும் போது இது நேரடியாக தெரிகிறது மறைமுகமாக பல கட்சிகளும் இப்படித்தான் இருக்கிறது என்கிறார்கள்.

18850cookie-checkஅதிமுக அமைச்சர் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!