மாநாடு 28 February 2022
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுக்க அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நில அபகரிப்பு வழக்கில் மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயபுரம் தொகுதிக்குட்பட்ட வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக கூறி திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் தாக்கினர்.அந்த அவரின் சட்டையை கழற்ற சொல்லி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிரட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் கடும் வைரலானது.
இந்த சம்பவத்தால் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மீது கொரோனா பரவல் சமயத்தில் விதி மீறி போராட்டம் நடத்தியது, நில உரிமையாளரை மிரட்டி அதிக மதிப்பிலான நிலத்தை 5 கோடி ரூபாய்க்கு குறைத்து வாங்கியது உள்ளிட்ட வழக்குகள் அடுத்தது பாய்ந்தன.
வழக்குகள் அடுத்தடுத்து பாய்ந்த நிலையில் ஜெயக்குமார் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வருகிறார்.இந்த நிலையில், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிமன்றம் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.