Spread the love

மாநாடு 20 March 2022

தமிழுக்கு இன்னல் என்ற போது இந்தியை விரட்ட தளபதியாய் நின்றவர்!

தமிழினம் அழிக்கப்பட்டதை அடுத்த தலைமுறைக்கு கடத்த முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த மாமனிதரும் தனது கணவருமான மா.நடராசன் நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

புதிய பார்வை இதழ் ஆசிரியர் ம.நடராசன் கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார். இவரது நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள நடராசன் நினைவிடத்தில் இவரது மனைவியும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான வி. கே சசிகலா இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் இவருடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா ஆர். தொண்டைமான், நடிகை சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் சசிகலாவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

25960cookie-checkதஞ்சாவூரில் சசிகலாவை சந்தித்த முக்கிய பிரபலங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!