மாநாடு 20 June 2022
சாதாரணமாகவே சாலை விபத்துக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் முக்கிய சாலையில் கேபிள் ஒயர் கீழே நெடுந்தூரம் கிடக்கின்றது,
இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது, இதனை உடனடியாக சரி செய்து விபத்துக்கள் ஏற்படாமல் பொதுமக்களை காக்க வேண்டுமென்று ஏஐடியுசி தஞ்சாவூர் மாநகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கிறது.
ஏஐடியூசி கோரிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் முக்கிய சாலையில் கேபிள் வயர் கீழே விழுந்து நீண்ட தூரத்திற்கு நடுரோட்டில் கிடக்கிறது. இந்த கேபிள் வயரில் நடந்து செல்பவர்கள் காலில் சிக்கி கீழே விழுந்து பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது .அதே போல இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் எதிர்பாராவிதமாக வயர் சிக்கி கீழே விழுந்து பெரிய ஆபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் இருக்கிறது. கார்கள்,பேருந்துகள் மற்றும் பெரிய வாகனங்கள் செல்லும் பொழுது கேபிள் வயர் மாட்டி பின்னால் வருபவர்கள் வயரில் சிக்கி கீழே விழுந்து பெரும் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையின் நடுவே கிடக்கின்ற கேபிள் வயர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
கேபிள் வயர் இணைப்புகள் அனைத்தும் நடுரோட்டில் மின்கம்பங்களில் இணைக்கப்பட்டு தஞ்சை நகர் முழுவதும் செல்கிறது. இந்த நிலைமைகளை மாற்றி வலதுபுறம் அல்லது இடது புறம் கேபிள் வயர்களை மரங்களை நட்டு அதன் வழியாக கேபிள் வயர் இணைப்பு ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பெரும் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஏஐடியூசி கேட்டுக் கொள்கிறது.
பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும். பல நாட்களாக கேபிள் வயர் இவ்வாறு இருப்பதை சரி செய்யாமல் அலட்சியப் போக்கில் இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.