மாநாடு 20 October 2022
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டலம் பொறையார் பணிமனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது அதிகாலையில் பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 9பேர் உடல் நசுங்கி இறந்தார்கள்.
இறந்தவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தஞ்சாவூர் நகர் கிளை ஜெபமாலைபுரம் முன்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
பொறையார் பணிமனை கட்டிடம் 1942 ல் கட்டப்பட்டதாகும். அந்த கட்டிடம் மிகவும் மோசமாக இருந்ததால் அப்போதைய மேலாண் இயக்குனர், பொது மேலாளரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தும் சீரமைக்கப்படவில்லை, அவர்களை வேறு இடத்திலும் ஓய்வு எடுக்க, உறங்க சொல்லவில்லை. கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 9 பேர் பலியாகியுள்ளனர். நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இருந்தால் இந்த கோர விபத்து என்பது தவிர்க்கப்பட்டு இருக்கும், தொழிலாளர்கள் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். கட்டிட விபத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஓய்வறை ,குளியலறை, கழிவறை, அலுவலக கட்டிடங்களை பராமரிக்க குழு நியமிக்கப்பட்டது. ஆனால் கால போக்கில் அந்த குழுவும் செயல்பாடு இல்லை.
தற்போது கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் நாகப்பட்டினம் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பணிமனைகளில் கட்டிடங்கள் மிகவும் மோசமாக உள்ளது, குளியலறை, கழிவறைகள் மோசமாக உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும், பராமரிக்க வேண்டும், புதுப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்கு உரிய தேவையான நிதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று பொறையார் பணிமனை கட்டிட விபத்தில் பலியானவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏ ஐ டி யூ சி மத்திய சங்க பொருளாளர் சி.ராஜ மன்னன் தலைமை வகித்தார். சிஐடியு மத்திய சங்க பொருளாளர் எஸ்.ராமசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், தலைவர் வெ.சேவையா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, கௌரவ தலைவர் கே.சுந்தர பாண்டியன், சி ஐ டி யூ நிர்வாகி ஜீவா, ஏஐடியூசி சங்க நிர்வாகிகள் எஸ்.மனோகரன், அ.இருதயராஜ், எம். தமிழ் மன்னன், டி.ரெஜினால்டு ரவீந்திரன், சோமசுந்தரம், சிவக்குமார், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.