Spread the love

மாநாடு 31 October 2022

இந்தியாவில் முதல் தொழிற்சங்கமான ஏ ஐ டி யு சி தொழிற்சங்கத்தின் 103 வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து சங்க கிளைகள் முன்பும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

நாடு அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் எந்த விதமான உரிமையும் இல்லாமல் மணிக்கணக்கின்றி உழைத்தனர். பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். இந்நிலையில் இந்தியாவில் அரசியல் கட்சிகள் தோன்றுவதற்கு முன்னதாக முதன்முதலாக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக 1920ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஏஐடியூசி சங்கம் துவக்கப்பட்டது. சிங்காரவேலர்,லாலா லஜபதி ராய், நேரு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஏஐடியூசி சங்கத்தில் தலைமையேற்று வழி நடத்தினார்கள். நாட்டின்
விடுதலைக்காக பாடுபட்டார்கள். நாடு விடுதலையாவதற்கு முன்பாக வெள்ளையர் காலத்திலேயே தொழிலாளர்கள் உரிமைக்காக போராடி எட்டு மணி நேர வேலை, குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டம் உள்ளிட்ட தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர் நல சட்டங்களை போராடி பெற்று தந்தது.

ஏஐடியூசி.தற்போது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஒன்றிய மோடி அரசாங்கம் போராடி பெற்ற தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களை சுருக்கி 4 தொகுப்பாக அமல்படுத்தி வருகிறது, விலைவாசியை உயர்வு என்பது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது,

உழைக்கும் மக்கள் மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது,மக்களுக்கு சேவை செய்து வரும் போக்குவரத்து, வங்கி, மின்வாரியம் உள்ளிட்டு மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப் படுகிறது, போராடிப் பெற்ற சட்டங்களையும், தொழிலாளர் உரிமைகளையும், தொழிற்சங்க உரிமைகளையும் பாதுகாப்போம் என ஏஐடியூசி 103 வது ஆண்டு அமைப்பு நாளில் உறுதியேற்கப்பட்டது. 

தஞ்சையில் இன்று காலை 9 மணிக்கு மாவட்ட ஏ ஐ டி யூ சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமை வகித்தார். மாநில செயலாளர் சி.சந்திரகுமார் அமைப்பு நாள் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கீழவாசல் கட்டுமான சங்க கொடியினை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

அரசு போக்குவரத்துக் கழகம் கரந்தை புறநகர் பணிமனை, அரசு போக்குவரத்து கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சை நகர கிளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம், திலகர் திடல் காய்கறி மார்க்கெட் சங்கம், டாஸ்மாக் மண்டல அலுவலகம், ரயிலடி மற்றும் தொல்காப்பியர் சதுக்கம் ஆட்டோ சங்கம் ஆகிய இடங்களில் ஏ ஐ டி யூ சி அமைப்பு நாள் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை,தலைவர் மல்லி ஜி.தியாகராஜன், அரசு போக்குவரத்து கழக சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், பொருளாளர் சி.ராஜமன்னன், மின்வாரிய சம்மேளன மாநில துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், தலைவர் என்.இளஞ்செழியன், கருணா, பாலவடிவேல், திலகர் திடல் காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் கே.மணிகண்டன், நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மாவட்ட பொருளாளர் எஸ். தியாகராஜன் உள்ளிட்டார் பங்கேற்றனர்.

54990cookie-checkஅரசியல் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய இயக்கத்தின் 103 வது ஆண்டு விழா
One thought on “அரசியல் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய இயக்கத்தின் 103 வது ஆண்டு விழா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!