
மாநாடு 13 June 2025
மாநகராட்சியில் சில பில் கலெக்டர்கள் வாங்கும் சம்பளத்தையும் அவர்களின் சொத்துக்களையும் ஆய்வு செய்து பார்த்தாலே தெரியும் கொஞ்சமும் பயமில்லாமல் லஞ்சம் வாங்கி சொத்துக்கள் குவித்து இருப்பது ஒரு அரசு பணியாளர் சொத்துக்களை வாங்க வேண்டும் என்றால் மேலதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் அதேபோல பதிவேடுகளில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்கிறது அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்.
சமீப காலமாக லஞ்சம் வாங்குவது என்பது சர்வசாதாரணமான செயலாக உருவகப்படுத்தப்பட்டு வருகிறது யாரப்பா லஞ்சம் வாங்கல ஏதோ ஒரு வாங்கிட்டு வந்து பேசுறீங்க என்று சொல்லும் அளவுக்கு லஞ்சத்தை சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் பரவ விட்டிருக்கின்றனர் பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை போலியாக பெறுவதற்கு கூட லஞ்சத்தை வாங்குவதற்கு என்றே வேலையாட்களை போட்டு அவர்களுக்கு தங்களே சம்பளம் கொடுக்கும் அளவிற்கு லஞ்சப் பெருச்சாளிகள் பெருகிக் கிடக்கின்றனர் அதுபோல லஞ்ச பெருச்சாளிகள் சில நேரத்தில் வசமாக சிக்குவதுண்டு தஞ்சாவூர் மாநகராட்சியில் மிக விரைவில் பலரும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகராட்சியில் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் செபஸ்தியான் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் திருச்சி கொட்டப்பட்டு கிராமம் அன்பில் நகரில் சுமார் 5,920 சதுரடி உள்ள காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்காக Zone-IV பொன்மலை மண்டலம் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 65வது வார்டு பில் கலெக்டர் செபஸ்தியானை அனுப்பியுள்ளனர் அவர் 12,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர் சீனிவாசன் கெஞ்சியதன் பேரில் லஞ்சத் தொகையை 10,000 ரூபாயாக குறைத்துக் கொண்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் கடந்த 11.06.2025ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் . புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதனையொட்டி நேற்று துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் இணைந்து சிக்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் . இந்த நடவடிக்கையின் போது பில் கலெக்டர் செபஸ்தியான் சீனிவாசனிடமிருந்து 10,000 ரூபாய் லஞ்சப் பணத்தை நேற்று தனது அலுவலகத்தில் வைத்து வாங்கிய போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பில் கலெக்டர் செபஸ்தியானை கைது செய்து சோதனை செய்தபோது அவரிடம் கணக்கில் வராத மேலும் 24,000 ரூபாய் இருந்ததை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டறிந்தனர். இந்தத் தொகையை சந்தேகத்தின் பேரில் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக திருச்சி பொன்மலை மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.