மாநாடு 20 March 2025
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை தெற்கு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்ததாக கூறப்படும் பெரிய குளம் அந்த பகுதியில் உள்ள ஒருசில சமூக விரோதிகளால்
ஆக்கிரைமைப்பு செய்ய பட்டுள்ளதாகவும் இதனை பலமுறை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஊர் மக்களின் குளத்தை மீட்டுத் தருவாரா ? தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் என்ன செய்ய போகிறார்? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கீழ் இயங்கும் அரசு நிர்வாகம் எப்படி செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்… செய்தி – அருள்