மாநாடு 28 March 2025
தஞ்சாவூர் மாநகராட்சியின் முக்கிய பகுதியான கருந்தட்டாங்குடியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாயில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் கலந்து வருவது நாள்தோறும் நடந்து கொண்டே இருந்திருக்கிறது . இந்த கொடுமையை பலமுறை மனுக்களாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு அலைபேசியில் அழைத்தும் நேரில் சென்றும் சுஜானா நகர் பகுதி மக்கள் சார்பாக சுஜானா நகர் குடியிருப்போர் நல சங்க செயலாளர் தரும.கருணாநிதி எடுத்துக் கூறிய போதும் அலட்சியமான போக்கே தொடர்ந்து நடந்து வந்துள்ளது கடமையை செய்ய வேண்டிய அதிகாரிகளின் கொடுமையை தாங்க முடியாமல் மாநாடு செய்தி குழுமத்தில் முறையிட்டு நடந்தவற்றை முழுவதுமாக ஆதாரங்களோடு
சமர்ப்பித்தார்கள் அதனை தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு
புரியும் விதத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டிருந்தோம் அதன் விளைவாக இன்று அந்த சாக்கடை கழிவுநீர் எங்கிருந்து வந்து குடிநீரில் கலக்கிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து சரி செய்யும் வேலையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் அதற்குக் காரணமாக செயல்பட்ட மாநாடு செய்தி குழுமத்திற்கு தங்களது நன்றியையும் மகிழ்வையும் சுஜானா நகர் மக்கள் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள்.
அரசியல் மாநாடு செய்தி குழுமத்தின், தொடர் செய்தியால்,படத்தில் மேலே செல்வது கழிவுநீருக்கான குழாயாகும், கீழே செல்வது குடிநீருக்கான, குழாயாகும். கழிவுநீர் செல்லும் குழாய் உடைந்து, குடிநீர் செல்லும் குழாயின் மீது அழுத்தியதால், குடிநீர் குழாய் உடைந்து, கழிவு நீர் அதில் கலந்து, கடந்த மூன்று மாதங்களாக இதே நிலை நீடித்தது, நகரில் வசிப்பவர்களுக்கு, தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டது, மாநகராட்சி நிர்வாகம், மேம்போக்கான நிலையையே, கையாண்டது அரசியல் மாநாட்டின், தொடர் செய்தி எதிரொலியாக, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டதால், கழிவுநீர், குடிநீரில் கலக்கும் இடத்தை கண்டறிந்து, சரி செய்யப்பட்டது, மக்களின் அன்றாட தேவை அறிந்து, அரசியல் மாநாடு செய்தி குழுமம் தொடர் செய்தி வெளியிட்டதற்கு, சுஜானா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்! நன்றி ராம்குமார்!
இவ்வாறாக தெரிவித்திருக்கிறார்கள் .
நமக்கான அதிகாரம் நம் மக்களுக்கானது “அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கான சேவையை செய்ய தவறினால்?
மாநாடு செய்தி குழுமத்திற்கு இருக்கும் செய்தி வெளியிடும் அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு மக்களுக்கான செயல்களை இறுதிவரை உறுதியாக நின்று செய்ய வைப்போம் …
இப்பணியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாநாடு செய்தி குழுமத்தின் பாராட்டுக்கள்.