Spread the love

மாநாடு 9 April 2025

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டிருந்த தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் பல்கலைக்கழகம் சிந்தாமணி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள், 200 குடும்பங்கள்

சுகாதாரமற்ற குடிநீரை குடிக்க வேண்டி இருக்கிறது , நோய் பரவும் அபாயம் இருக்கிறது , நாய் செத்து மிதக்கிறது தயவு செய்து எங்களுக்கு நல்ல குடிநீரை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று பலமுறை

பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் மக்கள் முறையிட்ட போதும் மக்களுக்காக சிறு முயற்சியைக் கூட ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் எடுக்க வில்லையாம் , இங்குள்ள வீடுகளை இடிக்க போறாங்க என்று காரணத்தை சொல்லித் தட்டி கழித்தாராம். இந்நிலையை மாநாடு செய்தி குழுமத்தற்கு மக்கள் தெரியப் படுத்தியிருந்தார்கள். மக்களுக்காக உழைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்ற வந்திருப்பவர் தான் ஊராட்சி மன்ற தலைவர் அவரிடம் முறையிடுங்கள் அவர் அதிகாரிகளிடம் கொண்டு சென்று உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்று கூறியிருந்தோம். ஆனால் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமாரின் பதவி காலம் முடியும் வரை இந்தப் பிரச்சினையை தீர்க்க எதுவுமே செய்யவில்லையாம், அதன் பிறகு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் புகார் கடிதம் அனுப்பியிருப்பதை குறிப்பிட்டு , மாநாடு செய்தி குழுமத்தின் அலுவலக முகவரிக்கும் பதிவு தபால் மூலம் அனுப்பி இருந்தார்கள் . உடனடியாக களத்திற்குச் சென்று நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மாநாடு டிவி மற்றும் மாநாடு மின்னிதழ் உள்ளிட்ட மாநாடு செய்தி குழுமத்தில் செய்திகள் வெளியிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம். துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் மக்களின் நீண்ட நாள் குறைகள் தங்களுக்கு முறையாக தெரியவந்த நிலையில் அடுத்த நாளே பணிகளை தொடங்கி இருக்கிறார்கள் 5 நாட்களில் சரி செய்யப்பட்டு இருக்கிறது.

தண்ணீர் குழாய் கழிவு நீரோடு கலக்காமல் சீர் செய்து புதிய குழாய்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், உயிரினங்கள் விழும் அபாயத்தில் திறந்து கிடந்த கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மூடிகள் போடப்பட்டு விட்டதாகவும்

போட்டோ ஆதாரங்களை நமக்கு கொடுத்த மக்கள் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் நம்மிடத்தில் பகிர்ந்து கொண்டார்கள் , இவை அனைத்தும் ஒவ்வொன்றாக 5 நாட்களில் செய்து கொடுத்த அதிகாரிகளுக்கும், தங்களது பிரச்சனையை சரியான இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று வெளியே வந்து தங்களது கஷ்டங்களைச் சொன்ன மக்களுக்கும், நற்செயல்கள் அனைத்துக்கும் துணையாக இருக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அனைவருக்கும் மாநாடு செய்தி குழுமத்தின் வாழ்த்துக்கள்.


குறிப்பு – இந்த மக்களுக்கு பயன்படும் படி புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி தர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது அதனையும் அதிகாரிகள் செய்து கொடுப்பார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள் …

செய்தியை காண – https://youtu.be/7XdfsPLm2Mc

78350cookie-checkதஞ்சையில் 5 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவர் செய்யவில்லை 5 நாட்களில் செய்த அதிகாரிகள் , மக்கள் பாராட்டுக்கள்

Leave a Reply

error: Content is protected !!