மாநாடு 09 May 2025
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் 12
12 வயது சிறுமிக்கு வயது சிறுமிக்கு வளைந்த முதுகு தண்டுவடத்தை சரி செய்வதற்கான ஸ்கோலியா சீஸ் அறுவை சிகிச்சையை
டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பார்த்திபன், சண்முகஹரி,பாலகுருநாதன், மயக்கவியல் துறையின் முதுநிலை டாக்டர்கள் அரிமாணிக்கம், வினோதா தேவி ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் மேற்கொண்டு சாதனை. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை தலைவர் மருத்துவர் குருசங்கர் கூறுகையில், தமிழகத்தின் டெல்டா
பிராந்தியத்தில் உலகத்தரமான மருத்துவ சேவை வழங்குவது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதால் தற்போதைய அறுவை சிகிச்சையின் வெற்றி அதற்கு அடிகோலிட்டு காண்பித்திருக்கிறது என்றார்.
இதுகுறித்து முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில் டெல்டா மாவட்டங்களில் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக தனிப்பிரிவை நடத்தி வருவது மீனாட்சி மருத்துவமனை ஒன்றே என்றார்.மீனாட்சி மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பிரவீன் உடனிருந்தார்.
செய்தி – N.செந்தில்குமார்